வெஞ்சன் என்னும் அரசன் வழிபட்டதாலும், குடவன் ஆற்றோடு, ஒரு காட்டாறு கூடுவதாலும் இத்தலம் 'திருவெஞ்சமாக்கூடல்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'கல்யாண விகிர்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பண்ணேர் மொழியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், அறுபத்து மூவர், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது, அவருக்கு பொன் தேவைப்பட்டது. அவர் இறைவனை வேண்டினார். இறைவனும், தன்னிடம் பொன் இல்லை என்று கூறி, கிழவி வேடத்தில் வந்த அம்பாளிடம், தனது மகன்களை அடகு வைத்து பொன் பெற்று சுந்தரருக்குக் கொடுத்த தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|